சென்னை: Rashmika Mandanna Birthday (ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள்) நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று. கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகை பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகா மந்தனாவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது என பலர் கூறலாம். ஆனால் அவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது வெறும் அழகால் மட்டும் இல்லை.
சமந்தா இல்லன்னா ராஷ்மிகா.. மவுசு ஏறிய நேஷனல் க்ரஷ் நடிகை! முன்னணி நடிகையாக ஜொலித்த ராஷ்மிகா மந்தனா சலோ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு முதல் படம் பெரிய வரவேற்பை அளிக்கவில்லை. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. அதில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவலே பாடலில் அவர் கொடுத்த எக்ஸ்பிரெஷன்ஸை பார்த்த பலரும் ராஷ்மிகாவின் நடிப்புக்கு கட்டுண்டனர். அதுமட்டுமின்றி அந்தப் பாடலின் மூலமும், அந்தப் படத்தில் அவர் காட்டும் ஒவ்வொரு எக்ஸ்பிரெஷன் மூலமும் அவருக்குள் மிகச்சிறந்த நடிகை இருக்கிறார் என தெரிந்துகொண்டது தெலுங்கு திரையுலகம். சுமார் வரவேற்புதான் இருந்தாலும் க்ரஷ் ஏறியது அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவின் மீதான க்ரஷ் ரசிகர்களுக்கு ஏறிக்கொண்டது. விழ விழ எழலாம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றிக்கொண்டே சென்றார் ராஷ்மிகா. அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு குவிந்தன. முதல் படம் தோல்வியாக இருந்தால் என்ன? தெலுங்கில் வெற்றிகொடி நாட்டிய ராஷ்மிகா தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். முதல் படம் தோல்வியையே சந்தித்தது. எனவே தமிழில் அவருக்கு இனி வாய்ப்புகள் கிடைக்காது என்றே ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அந்த ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக விஜய் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. வாரிசு படத்தில் நடித்த அவரது எக்ஸ்பிரெஷன்களை ரசிகர்கள் மீண்டும் ரசித்தனர். மைக்கேல் ஜாக்சி ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடனம் ஆடும் வெகு சிலரில் விஜய்யும் ஒருவர். அவருக்கு ஈடுகொடுத்து ஆடும் வெகு சில ஹீரோயின்களில் சிம்ரனுக்கு அடுத்து யாரும் இல்லை. ராஷ்மிகா வாரிசில் தோன்றும்வரை அப்படித்தான் இருந்தது. ஆனால் வாரிசு படத்தின் பாடல்களில் விஜய்யுடன் ராஷ்மிகா ஆடும்போது சிம்ரன் வரிசையில் அவர் இணைந்துவிட்டார் என்பதே உண்மை. சுருக்கமாக மதன் கார்க்கி வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் 'மைக்கேல் ஜாக்சி' ராஷ்மிகா மந்தனா. நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் ராஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு என கலக்கிய ராஷ்மிகா ஹிந்தியில் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சாண்டல்வுட்டில் தொடங்கி டோலிவுட், கோலிவுட் என பயணப்பட ஆரம்பித்து இப்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் ராஷ்மிகா உழைப்பு சாதாரணமில்லை. ஏனெனில் அவர் சில்வர் ஸ்பூன் குழந்தை இல்லை. லோயர் மிடில் க்ளாஸ் டூ சூப்பர் ஸ்டார் ராஷ்மிகா மந்தனா லோயர் மிடில் க்ளாஸில் இருந்து வந்தவர். அவர் சிறுவயதாக இருக்கும்போது வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் மாதம் ஒருமுறை வீடு மாற்றும் படலம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டவர். ஆனால் அந்த கஷ்டத்துக்குள்ளேயே சிக்கிக்கொள்ளாமல் அந்த கஷ்டத்தை எட்டி மிதித்து உதறி இன்று சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார். அதற்கு துணை நின்றது அவரது உழைப்பு மட்டுமே. பொதுவாக சினிமாவில் யாரின் துணையும் இல்லாமல் ஒரு ஆண் வென்றால் அது கொண்டாடப்படும். அதே ஒரு பெண் வென்றால் அதை கண்டுகொள்ள சமூகத்தில் பெரும்பாலானோர் தயாராக இருப்பதில்லை. அது 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் காலகட்டத்திலும் இருந்தது. இப்போது 2K கிட்ஸ் காலம் என்ற கருத்தே பெரும்பாலானோரிடத்தில் இருக்கிறது. இக்கால தலைமுறையின் க்ரஷ்ஷாக ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். அவர் யாரின் துணையும் இல்லாமல் தனது திறமையை வைத்து லோயர் மிடில் க்ளாஸிலிருந்து சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருக்கிறார். அவரை அனைவருமே கொண்டாட வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் ராஷ்மிகா மந்தனா
Post a Comment