சென்னை: சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல்மூலம்தான் இவர் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்திருந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் ரச்சிதா மகாலட்சுமி, தற்போது தெளிவாக செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். டைட்டிலை வெற்றி கொள்ளவில்லை என்ற போதிலும் இவருக்கு இந்த நிகழ்ச்சி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. தெரப்பிஸ்டை சந்தித்த சீரியல் நடிகை ரச்சிதா: நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல்மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் காதலையும் பரிசாக கொடுத்தது. இந்தத் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் நீடிக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரிவோம் சந்திப்போம் தொடரை தொடர்ந்து ரச்சிதா நடித்திருந்த சரவணன் மீனாட்சி தொடரும் இவரை பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசனில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சி இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. மெய்நிகரே என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. ரச்சிதாவும் தினேஷும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக காணப்படுகிறது. அந்த அளவிற்கு இவர்கள் திருமண வாழ்க்கையிலும் முன்னதாக காதல் வாழ்க்கையிலும் மிகவும் அன்னியோன்னியமாக காணப்பட்டனர். பொதுவெளியிலும் தினேஷை மாமா, மாமா என்று விருப்பத்துடன் மகாலட்சுமி அழைத்தது அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இவர்களின் பிரிவு ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சமீபத்தில் தினேஷ் தன்னை ஆபாசமாக திட்டி மெசேஜ் அனுப்புவதாக ரச்சிதா மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்துக் கொள்ள அறிவுறுத்தி போலீசார் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ரச்சிதா மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
வடிவேலுவின் நடிப்பை காண குவியும் மக்கள்.. 3வது நாளில் மாமன்னன் வசூல் இவ்வளவா? இந்நிலையில் தான் தெரப்பிஸ்டை பார்க்க செல்வதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவருடைய தற்போதைய சூழலுக்கு இது அவசியம்தான் என்று ரசிகர்களும் கமெண்ட் செய்தனர். இதனிடையே தற்போது ரச்சிதா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தான் தெரப்பிஸ்டை சந்தித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த தெரப்பிஸ்ட் வேறு யாருமில்லை. அவர்கள் வீட்டு செல்லப் பூனைக்குட்டிதான். அந்த குட்டியை அவர் கொஞ்சும் வீடியோவைத்தான் அவர் தனது இன்ஸடாகிராமில் இணைத்துள்ளார்.
Post a Comment