NEWS NEWS Author
Title: #ஜெயிலர் படத்தின் #Kaavaalaa முதல் சிங்கில் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்
Author: NEWS
Rating 5 of 5 Des:
  ஜெயிலர் படத்தின் #Kaavaalaa என்ற முதல் சிங்கிலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினி நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர்...

 

ஜெயிலர் படத்தின் #Kaavaalaa என்ற முதல் சிங்கிலை படக்குழு வெளியிட்டுள்ளது.



ரஜினி நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள்  நடித்துள்ளனர்.


அனிருத் இசையமைத்துள்ள  இந்த படம் வரும்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது.



இந்த நிலையில், ஜெயிலர் பட முதல் சிங்கிலான #Kaavaalaa என்ற பாடல்  இன்று வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன் புரமோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.


அதன்படி,  ஜெயிலர் படத்தின் #Kaavaalaa என்ற முதல் சிங்கில் பாடலை சன்டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், தமன்னா  அசத்தல் நடனம் ஆடியுள்ளார்.   இந்தப் பாடலை இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை ஷில்பா ராவ் மற்றும் அனிருத் பாடியுள்ளனர். இப்பாடலை அருண் ராஜா காமராஜா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

It’s time to vibe for #Kaavaalaa

About Author

Advertisement

Post a Comment

 
Top