NEWS NEWS Author
Title: Jailer First Single: வெளியானது ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்... தமன்னாவுடன் ஆட்டம் போடும் சூப்பர் ஸ்டார்
Author: NEWS
Rating 5 of 5 Des:
 சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் வெளியா...

 சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 





 தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார். தமன்னாவுடன் ஆட்டம் போட்ட தலைவர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் 'காவாலா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ்வின் ஹஸ்க்கியான குரலில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றுகிறது 'காவாலா' பாடல். அதேபோல், தமன்னாவின் கிளாமர் ஆட்டமும் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. Jailer Audio Launch - ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா எப்போ தெரியுமா? முன்னதாக இந்தப் பாடலில் தமன்னா மட்டுமே நடனம் ஆடியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியான முழு பாடலில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தமன்னா உடன் ஆட்டம் போட்டு மாஸ் காட்டியுள்ளார். தமன்னா செம்ம கிளாமராகவும், சூப்பர் ஸ்டார் ரஜினி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் செம்ம வைபில் உள்ளனர். 'வா நூ ஆவாலா' எனத் தொடங்கும் இப்பாடல் வெளியானது முதலே டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஜி கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகம் என கிளாமரில் கிக் ஏற்றிய தமன்னா, இந்தப் பாடலிலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. அதேநேரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள், அவ்வளவாக ஈர்க்கவில்லை எனவும் ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ரஜினியின் படங்களிலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானால் அது அவரது இன்ட்ரோ பாடலாக வெளியாவது தான் வழக்கம். ஆனால், அதுவும் இல்லாமல் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ரஜினி ரசிகர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.



About Author

Advertisement

Post a Comment

 
Top