NEWS NEWS Author
Title: விடுதலை பட நாயகியா இது… அடுத்தடுத்து குவியும் படவாய்ப்பு… மொத்தமாக மாறிய பாவனி ஸ்ரீ!
Author: NEWS
Rating 5 of 5 Des:
 சென்னை: விடுதலை பட நாயகி பவானி ஸ்ரீயின் அசத்தலான லுக்கை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மாஸ...

 சென்னை: விடுதலை பட நாயகி பவானி ஸ்ரீயின் அசத்தலான லுக்கை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மாஸ் காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை தான் பவானி ஸ்ரீ. 





 இவருக்கு சினிமாவில் இருந்த ஆசையால் 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை: மாடலாக இருந்த பவானி ஸ்ரீ நெட்ஃபிளிக்ஸில் வெளியான பாவக்கதைகளில் நடித்திருந்தார். அதன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கா.பெ.ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. விடுதலை படத்தில்: அண்மையில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் நடிகர் சூரியின் காதலியாக படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது நடிகை பவானி ஸ்ரீ நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தீப்பந்தத்துடன் கமல். மிரட்டலான வீடியோ..கமல்ஹாசன் - எச்.வினோத் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மொத்தமாக மாறி நடிகை: இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருக்கக்கூடிய பவானி ஸ்ரீ, சுமார் 4 லட்சம் ஃபாலோவர்சை வைத்து இருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மொத்தமாக மாறி இருக்கிறார். அந்த போட்டோவை AI தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு தனது போட்டோக்களை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


About Author

Advertisement

Post a Comment

 
Top