NEWS NEWS Author
Title: லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகை கஜோல்… கருப்பு நிற புடவையில் கலங்கடிக்கும் போட்டோஸ்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
 பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை கஜோல் கருப்பு நிற புடவையில் விதவிதமான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் ...

 பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை கஜோல் கருப்பு நிற புடவையில் விதவிதமான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். பால் போல வெள்ளையாக இருப்பவர்கள் தான் சினிமாவில் நடிகையாக முடியும் என்ற எண்ணத்தை மாற்றி டஸ்கி நிறமாக இருந்த போது பாலிவுட்டில் தனது திறமையால் ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். 





 நயன்தாரா வீட்டு பஞ்சாயத்து.. போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு சென்ற சொந்தக்காரர்கள் தற்போது நடிகை கஜோல் அனைவரும் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக வருகிறார். நடிகை கஜோல்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ராசியான ஹீரோயினான கஜோல், பகுடி என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின், ஷாருக்கானுடன் இணைந்து பாஸிகர் படத்தில் நடித்தார். இந்த படம் பாலிவுட் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான திரைப்படமாக உள்ளது. KGF டீசருக்கு கால் தூசுக்கூட இல்லை.. பிரபாஸ் மூஞ்சிய காட்டவே பயப்படுறாரா.. பறக்கும் சலார் மீம்ஸ்! ஸ்டார் நடிகை: இப்படி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டில் மாஸ் காட்டி வந்த கஜோல், மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த தம்பதிக்கு நியாசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் இருக்கிறார்கள். இதையடுத்து, சினிமாவில் நடிக்க தொடங்கிய கஜோல் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தொழிலதிபராக நடித்திருந்தார். அப்போது கஜோல் வந்த காட்சிக்கு கைத்தட்டலும், விசில் சத்தமும் பறந்தது. தி குட் வைப்: நடிகை கஜோல் கடந்த வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனால், அவர் அஜய் தேவ்கனை விவாகரத்து செய்யப்போவதாக செய்தி இணையத்தில் பரவியது. ஆனால், நடிகை கஜோல் அடுத்ததாக நடிக்க உள்ள தி குட் வைப் என்கிற திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அப்படி பதிவிட்டு இருந்தார் என தெரிந்ததும் ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள். RajiniKanth: ஸ்டைலு ஸ்டைலுதான்.. ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ! லஸ்ட் ஸ்டோரீஸ் 2: நடிகை கஜோல் அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதில் கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் கடைசி வரும் அத்தியாயத்தில், காமக்கொடூர கணவனால் தினமும் அவதிக்குள்ளாகும் பெண்ணாக நடித்திருந்தார். அதே அழகு: தற்போது நடிகை கஜோல் கருப்பு நிற புடவையில் கலங்கடிக்கும் அழகுடன் இருக்கும் போட்டோவை பார்த்து உச்சிகொட்டி வருகின்றனர். 40 வயதை தாண்டிய போதும் மின்சாரக்கனவு திரைப்படத்தில் பார்த்த அதே அழகுடன் சும்மா நச்சுனு இருக்கும், கஜோலின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.



About Author

Advertisement

Post a Comment

 
Top