NEWS NEWS Author
Title: ராம்சரண் படத்தில் கதாநாயகியாகும் சீதாராமம் மிருனாள் தாக்கூர்?
Author: NEWS
Rating 5 of 5 Des:
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ...

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார்.





இதையடுத்து அவர் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது.

About Author

Advertisement

Post a Comment

 
Top