NEWS NEWS Author
Title: துபாய்க்கு ப்ரமோஷனுக்கு சென்றுள்ள மாவீரன் படக்குழு!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிற...

 



சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இந்த படம் மாவீர்டு என்ற பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது துபாய்க்கு படக்குழு சென்றுள்ளது. முன்னதாக படக்குழுவினர் ஐதராபாத் மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் ப்ரமோஷனுக்காக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் மூலமாக அர்ஜுன் விஷ்வா தயாரித்துள்ளார்.  நாளை காலை  9 மணி சிறப்புக் காட்சியோடு இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகவுள்ளது

About Author

Advertisement

Post a Comment

 
Top