சென்னை: இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷெரின். தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்த ஷெரின் இடையில் பல ஆண்டுகள் காணாமல் போனார்.
தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவரை காண முடிந்தது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். சிங்கிளாக இருப்பது போரடிப்பதாக ஷெரின் பேட்டி: நடிகை ஷெரின் இயக்குநர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினார். விசில் படத்தில் அழகிய அசுரா என்று இவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களிலேயே இவர் காணாமல் போனார். நீண்ட காலங்கள் கழித்து பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற ஷெரின் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மீண்டும் தன்வசப்படுத்தினார். மிகவும் குண்டாக காணப்பட்ட ஷெரின் சில மாதங்களிலேயே தன்னை ஸ்லிம்மாக்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதனிடையே பிரபல யூடியூப் சேனலுக்கு ஷெரின் அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவில் ரசித்துக் கொண்டிருந்தபோது தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்ததாகவும் சில நேரங்களில் ரத்தத்தில்கூட தனக்கு கடிதங்கள் வரும் என்றும் ஷெரின் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தனக்கு மீண்டும் ரசிகர்களை கொடுத்துள்ளதாகவும் பெண் ரசிகர்களும் தனக்கு அதிகமான அளவில் உள்ளதாகவும் ஷெரின் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கையை தான் பிளான் செய்யாமல் ஓட்டுவதால் சிறப்பாக போவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய பிரேக் அப்பிற்கு பிறகு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்களிடம் இருந்தும் அதிகமான ப்ரபோசல்கள் வருவதாகவும் ஷெரின் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கிளாக இருப்பது போர் அடிப்பதாகவும் ஷெரின் மேலும் கூறியுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Jailer First Single - ரஜினி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ஜெயிலர் முதல் சிங்கிள் அப்டேட் இதோ ஒரு கட்டத்தில் தனக்கு அதிகமான படங்களில் நடிப்பதில் இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் தனக்கு நிம்மதி கிடைக்காத சினிமாவில் நடிப்பதை தான் நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத விஷயங்களை தான் செய்வதில்லை என்றும் அதனால்தான் 8 வருடங்கள் இணைந்திருந்த தன்னுடைய காதலருடன் மனக்கசப்பு ஏற்பட்ட போது தான் பிரிந்துவிட்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போதுவரை தான் சிங்கிளாகத்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment