NEWS NEWS Author
Title: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர் - சைலண்டா காய் நகர்த்திய விக்னேஷ் சிவன்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  பிரபல இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். முத...

 

பிரபல இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். 


 

அந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்தது அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைக்க துவங்கியது

 

இந்நிலையில் கமல் ஹாசனின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அது ஜோடி பொருத்தம் சரியாக இல்லாததால், அவரை விட வயது குறைந்த இளம் நடிகையை தேடி பிடித்து ஜான்வி கபூரை புக் செய்துள்ளார்களாம்.

About Author

Advertisement

Post a Comment

 
Top