NEWS NEWS Author
Title: கேப்டன் மில்லர் ஷூட்டிங்கை முடித்த பிரபல நடிகர்… இயக்குனர் கொடுத்த அப்டேட்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
 இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இய...

 இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு சில மாதங்களாக படமாக்கி வருகிறது.




இந்த படத்துக்காக தனுஷ், நீண்ட தலைமுடியும், அடர்த்தியான தாடியும் கடந்த சில  மாதங்களாக வளர்த்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்றுள்ள அவர் மொட்டையடித்துள்ளார். இதனா கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கான  காட்சிகள் முடிந்துவிட்டது என சொல்லப்படுகிறது.


கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக் கட்டத்தை எட்டிவரும் நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்தீப் கிஷனுக்கான காட்சிகள் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அறிவித்துள்ளார்.

About Author

Advertisement

Post a Comment

 
Top