NEWS NEWS Author
Title: நிஜ கதாநாயகன் என விஜய் நிரூபித்துள்ளார். இரவு பாடசாலை குறித்து பிரபல தயாரிப்பாளர்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் இரவு பாடசாலை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.    இதி...

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் இரவு பாடசாலை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 



 

இதில் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கு செல்ல முடியாதவர்கள் கல்வி பயிலலாம் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது 

 

இந்த நிலையில் இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் கூறியிருப்பதாவது:


எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்.


 

மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க,  தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன்  விஜய் அவர்கள் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. 

 

தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்.

About Author

Advertisement

Post a Comment

 
Top