NEWS NEWS Author
Title: ஜெயம் ரவியின் 32வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள...

 

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜெனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


 

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க இருக்கிறார். 

 

ஏஆர் ரகுமான் இசையில் மகேஷ் த்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 


மேலும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

About Author

Advertisement

Post a Comment

 
Top